இலங்கையின் விலகல்- பிரிட்டன் கனடா கடும் ஏமாற்றம்

27 Feb, 2020 | 11:13 AM
image

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கையின் முடிவு குறித்து பிரிட்டனும் கனடாவும்  கடும் ஏமாற்றம்  வெளியிட்டுள்ளன.

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் தாரிக் அஹமட் இலங்கை தீர்மானத்திலிருந்து வெளியேற தீர்மானிததுள்ளமை குறித்து ஆழ்ந்த ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையை மனித உரிமைகளை பாதுகாக்குமாறும்,நல்லிணக்கம் சமாதானம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொறுப்புகூறல் நல்லிணக்கம் தொடர்பான மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்த தனது அணுகுமுறையை இலங்கை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என  கனடாவின் வெளிவிவகார அமைச்சர் பிரான்சுவா பிலிப் சம்பெயின் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பில் இலங்கையை மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடா கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right