தேர்தல் வரை மக்களின் நம்பிக்கையை வெல்ல கூடிய இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - சரித ஹேரத்

By T Yuwaraj

05 Aug, 2022 | 09:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றிருந்தாலும், அதனை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாவிடின் சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது.

தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை மக்களின் நம்பிக்கையை வெல்ல கூடிய வகையில் இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் வெளியேறுவர் - பாராளுமன்ற உறுப்பினர் சரித  ஹேரத் | Virakesari.lk

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் 69 இலட்ச மக்களாணையுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையி;ல் பதவி விலகினார்.

முன்னாள் ஜனாதிபதியின் இரண்டரை வருட பதவி காலத்தில் நான்கு அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதுடன்,பிரதமர் நியமனம் இருமுறை இடம்பெற்றது.மக்களின் போராட்டம் வரலாற்று ரீதியில் அரசியல் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருந்தாலும்,அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பிற்கு அமைய ஒரு சில விடயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதுவே பிற்பட்ட காலத்தில் சமூக மட்டத்தில் பாரிய விளைவுகள் ஏற்பட ஒரு காரணியாக அமைந்தது.

அரசியலமைப்பிற்கு அமைய எத்தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு அதனை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாவிடின் சமூக மட்டத்தில் அமைதி  நிலவாது.தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ஸ்தாபிக்கப்படும் இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் நாட்டு மக்களின் நம்பிக்கையை முழுமையாக வெல்லும் வகையில் செயற்பட வேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right