வெள்ளை மாளிகைக்கு அருகில் மின்னல் தாக்கம் - 4 பேர் காயம்

By T Yuwaraj

05 Aug, 2022 | 08:26 PM
image

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை பின்னிரவு (04.08.2022) மின்னல் தாக்கத்திற்குள்ளாகி நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கடும் புயலுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில் வொஷிங்டன் டி.சி. இலுள்ள லபாயெட் பூங்காவிலிருந்த இரு ஆண்களும் இரு பெண்களும் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு மிகவும் அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மின்னல் தாக்கத்தால் காயமடைந்தவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் இரகசிய சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right